மாநில செய்திகள்

வீடு, வீடாக தடுப்பூசி போடும் திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் + "||" + MLAs should go ahead with the house-to-house vaccination program

வீடு, வீடாக தடுப்பூசி போடும் திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்

வீடு, வீடாக தடுப்பூசி போடும் திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்
வீடு வீடாக தடுப்பூசி போடும் திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீடு வீடாக தடுப்பூசி போடும் திட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீடு வீடாக தடுப்பூசி
புதுவை மாநிலத்தை 100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று கருவடிக்குப்பம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளின் குறைகளை சரிசெய்ய உத்தரவிட்டு உள்ளேன். மேலும் ஸ்கேன் வசதி, காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியிடங்களை உடனே நிரப்ப அரசு முயற்சிகளையும் எடுக்கும்.
பின்விளைவுகள்
புதிய முயற்சியாக வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் தங்களது பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை முன்னௌடுத்து நடத்த வேண்டும். கட்சி எல்லைகளை கடந்து எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் உள்ள அனைவரும் 10 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். 
அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் நோக்கம். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே சில விஷயங்கள் கட்டாயப்படுத்துகிறது. மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும். உலகம் முழுவதும் 98 சதவீதம் பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள். 
புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை இன்னும் குறைக்கப்படவில்லை. ஆனால் கொரோனாவை தாண்டி இதய நோய், புற்றுநோய், போன்ற மற்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது. மக்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெலகாவியில் தொடர் கனமழை: வீடு இடிந்து விழுந்து 7 பேர் சாவு
பெலகாவியில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
2. பெரும்பாறை அருகே வீடு, ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டுயானைகள்
பெரும்பாறை அருகே வீடு, ரேஷன் கடைகயை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
3. வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
4. மாத தவணையில் வீட்டு மனை பட்டா கொடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி
மாத தவணையில் வீட்டு மனை பட்டா கொடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் மனு கொடுத்தனர்.
5. வீடு, வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை
வீடு, வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை.