மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு


மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 21 Sep 2021 7:11 PM GMT (Updated: 21 Sep 2021 7:11 PM GMT)

மாவட்ட வருவாய் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்தில் இருந்து வரும் சென்னையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாளரான ஷர்மிளா, கோவை மாநகராட்சி துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.

கோவை மாவட்ட வருவாய் அதிகாரி (முத்திரைத்தாள்) நர்மதாதேவி, சென்னையில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் பொது மேலாளராக இடமாறுதல் செய்யப்படுகிறார்.

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து வந்த மோகன்ராஜ், சென்னையில் உள்ள தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழக பொது மேலாளராக நியமிக்கப்படுகிறார்.

நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரி

நாகையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன், சென்னையில் உள்ள தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் துணை தலைமை இயக்க அதிகாரியாக (கொள்முதல் மற்றும் ஒப்பந்தம்) பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர் (நிர்வாகம்) பொன்னம்மாள், அதே அலுவலகத்தில் வர்த்தக பிரிவின் பொது மேலாளராக நியமிக்கப்படுகிறார்.

இந்த அலுவலகத்தில் வர்த்தக பிரிவின் பொது மேலாளராக இருந்து வரும் செந்தில்குமார், அதே அலுவலகத்தின் நிர்வாக பிரிவின் பொது மேலாளராக மாறுதல் செய்யப்படுகிறார்.

ஆவின் பொது மேலாளர்

கட்டாய காத்திருப்பில் இருந்து வரும் மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி, திருச்சி ஆவின் பொது மேலாளராகவும், இங்கு பொது மேலாளராக இருந்து வரும் ரசிகலா சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட தனி மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் (நில எடுப்பு) நியமிக்கப்படுகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தனி மாவட்ட வருவாய் அதிகாரி (நில எடுப்பு) ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், தேனி தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அதிகாரி (நில எடுப்பு) தியாகராஜன், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக பொதுமேலாளராகவும் இடமாறுதல் செய்யப்படுகின்றனர்.

சென்னை மாநகராட்சி

திருப்பூர் தனி மாவட்ட வருவாய் அதிகாரி (நில எடுப்பு-தேசிய நெடுஞ்சாலை) மதுராந்தகி, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் (நில எடுப்பு), சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி (நில எடுப்பு-தேசிய நெடுஞ்சாலை) ரத்தினசாமி, சென்னை சிப்காட் பொது மேலாளராகவும் (பொது நிர்வாகம் மற்றும் நில எடுப்பு) இடமாறுதல் செய்யப்படுகின்றனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் அதிகாரி (நிலம் மற்றும் எஸ்டேட்) ராஜேந்திரன், தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதன்மை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலராகவும் (நிலம் மற்றும் எஸ்டேட்), சென்னையில் செயல்பட்டு வரும் சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் பற்றி அளவிடக்கூடிய தரவுகள் சேகரிப்பதற்கான ஆணையத்தின் மாவட்ட வருவாய் அதிகாரி விமலா, சென்னை நகர போக்குவரத்து நெரிசல் நீக்கம் திட்ட தனி மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் (நில எடுப்பு) , சென்னை நகர போக்குவரத்து நெரிசல் நீக்கம் திட்ட தனி மாவட்ட வருவாய் அதிகாரியாக (நில எடுப்பு) பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் (நில எடுப்பு-தேசிய நெடுஞ்சாலை) நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story