சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டம் : டாடா நிறுவனம் உரிமையை வாங்கியுள்ளது


சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டம் : டாடா நிறுவனம் உரிமையை வாங்கியுள்ளது
x
தினத்தந்தி 27 Sep 2021 1:01 PM GMT (Updated: 27 Sep 2021 1:01 PM GMT)

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டப் பணிகளை அமைத்திடும் உரிமையை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது.

மும்பை, 

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் கட்டுமானப் பணிகள் நிறுவனமான டாடா திட்டங்கள் குழுமம் சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டப் பணிகளை வாங்கியுள்ளது.

அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2100 கோடி ரூபாய் செலவில்  சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டம்(வடக்கு துறைமுக அணுகு சாலை) அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதல் பாகமாக, ஆந்திர மாநில நெடுங்சாலை எண் ஏ.ஹச்-45 வழியாக எண்ணூர் துறைமுகம்  தட்ச்சூர் பகுதியுடன் இணைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலமாக சென்னை வெளிப்புற ரிங் ரோட்டுடன் வடக்கு துறைமுக அணுகு சாலையும் இணைக்கப்படும்.

6 வழிச்சாலையாக அமையவுள்ள இந்த சாலையின் மொத்த நீளம் 25.38 கிலோமீட்டர். பக்கிங்காம் கால்வாய் மேலே 1.4 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு பாலமும் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் 3 வருடங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 26 கட்டுமானங்கள் வர உள்ளன. அவற்றுள் 8 பெரிய பாலங்கள், 8 சிறிய பாலங்கள், 2 சாலை மேம்பாலங்கள், 7 சுரங்க வழி சாலைகள், 1 மாற்று சாலை ஆகியன அடக்கம். 

இந்த சாலை அமைக்கப்பட்ட பின், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இதனால் பயண நேரமும் குறைக்கப்படும். இந்த திட்டத்தால் சாலை அமையவுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரம்  உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

Next Story