குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது? - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது?  - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x
தினத்தந்தி 10 Oct 2021 5:54 AM GMT (Updated: 10 Oct 2021 5:54 AM GMT)

திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

சென்னை,

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அந்த வகையில், திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த தொகை எப்போது வழங்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாக்குறுதி குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுக அளித்த வாக்குறுதியின் படி தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கு திட்டம் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார்.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை சரியான முறையில் நடத்தினார்களா?; தற்போது நடைபெற்றதை விட நேர்மையாக தேர்தலை நடத்த முடியாது என்று கூறினார்.

Next Story