ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் தலைமைச் செயலாளர் உத்தரவு


ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் தலைமைச் செயலாளர் உத்தரவு
x
தினத்தந்தி 15 Oct 2021 7:22 PM GMT (Updated: 15 Oct 2021 7:22 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் தலைமைச் செயலாளர் உத்தரவு.

சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை வணிகவரிகள் (அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை ஆணையர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் உதவி கலெக்டர் பி.அலர்மேல்மங்கை, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் உதவி கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story