மாநில செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு + "||" + Rules of Electoral Conduct Concluded: State Election Commission Notice

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை, 

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் 6-10-2021 மற்றும் 9-10-2021 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மற்றும் தற்செயல் தேர்தல் நடைமுறைகள் நேற்றுடன் முடிவடைவதால் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் முடிவுக்கு வருகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவித்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்த பகுதிகளில் அரசு நலத்திட்டங்களை இனி மேற்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா; மரபணு பரிசோதனை நடத்த முடிவு
தென்ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியம் திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
3. 6வது மெகா முகாம்; அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடத்த முடிவு
தமிழகம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் அசைவ பிரியர்களுக்காக சனிக்கிழமை நடைபெற உள்ளது.
4. தேர்தலில் தோல்வி... பிரகாஷ் ராஜ் எடுத்த அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தலில் தோல்வியடைந்ததால் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
5. இமாசல பிரதேசம்: வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முடிவு
இமாசல பிரதேசத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.