பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் 100-ஐ தாண்டியது!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Oct 2021 1:14 AM GMT (Updated: 23 Oct 2021 1:14 AM GMT)

தொடரும் உச்சமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.22 காசுகளுக்கு இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை, 

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தில் ஒவ்வொரு நாளும் முத்திரை பதித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு விலை குறைந்து வந்த நிலையில், பெட்ரோல் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 16-ந்தேதி வரலாறு காணாத புதிய உயர்வை எட்டியது. அதேபோல், டீசலும் கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து கிடுகிடு வென உயரத் தொடங்கி, தினமும் உச்சத்தை தொட்டு கொண்டே இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 31 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 103 ரூபாய் 92 காசுக்கு விற்பனை ஆனது. டீசலை பொறுத்தவரையில் லிட்டருக்கு 33 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 99 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே தினமும் பெட்ரோல் 33 காசும், டீசல் 31 காசும் உயர்ந்து கொண்டே வருகிறது.  

அந்தவகையில் இன்றும் (சனிக்கிழமை) பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து  ரூ.104.22 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ.100.25 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Next Story