மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை..? வானிலை மையம் தகவல் + "||" + Which areas will receive rain in the next 3 hours? .... Weather Center Info

அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை..? வானிலை மையம் தகவல்

அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை..? வானிலை மையம் தகவல்
தமிகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, 

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. 

இது இன்று (புதன்கிழமை) மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (வியாழக்கிழமை) தெற்கு ஆந்திரா-வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
2. சென்னையில் மீண்டும் மழை குளிர்ந்த காற்றுடன் இதமான வானிலை நிலவியது
சென்னையில் நேற்று மீண்டும் மழை பெய்தது. குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான வானிலை நிலவியது.
3. சென்னையில் திடீரென பெய்த மழை
சென்னையில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.
4. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்.
5. ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்: மழையால் நான்காம் நாள் ஆட்டம் தாமதம்..!
இந்திய - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.