மாநில செய்திகள்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 772- பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + TN Covid 19 - Updtes on Nov 19

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 772- பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 772- பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 8,953- ஆக உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு முந்தைய நாளை விட சற்று குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;- 

தமிழகத்தில் மேலும்  772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,18,750- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில்  884- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில்  13- பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பைக் கண்டறிய  ஒரே நாளில் 1 லட்சத்து 02 ஆயிரத்து 383- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  தொற்று பாதிப்புடன் சிகிச்சையில்  உள்ளவர்கள் எண்ணிக்கை 8,953- ஆக உள்ளது.  சென்னையில் ஒரே நாளில் 120- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 42 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. மேலும் 86 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. ஜெர்மனியில் 80 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு...!
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 33.07 சதவிகிதமாக உயர்வு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,946- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
தமிழகத்தில் நேற்று 23,975- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.