நிலச்சரிவு: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


நிலச்சரிவு: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 11:52 PM GMT (Updated: 19 Nov 2021 11:52 PM GMT)

நிலச்சரிவு காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே நிலச்சரிவு காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* கொல்லம்-திருவனந்தபுரம் (06425) இடையே மதியம் 3.55 மணி, நாகர்கோவில்-திருவனந்தபுரம் (06426) இடையே காலை 6.30 மணி, திருவனந்தபுரம்-நாகர்கோவில் (06427) இடையே மாலை 5.15 மணி, திருவனந்தபுரம்-நாகர்கோவில் (06435) இடையே மாலை 6 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று (20-ந்தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* திருச்சி-திருவனந்தபுரம் (22627) இடையே காலை 7.10 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் நெல்லை-திருவனந்தபுரம் இடையில் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-திருச்சி (22628) இடையே இன்று காலை 11.35 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம்-நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மதியம் 2.25 மணிக்கு நெல்லையில் இருந்து இயக்கப்படும்.

* புனலூர்-மதுரை (16730) இடையே இன்று மாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் புனலூர்-நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் இருந்து 21-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும்.

* கொல்லம்-எழும்பூர் (16724) இடையே இன்று மதியம் 3 மணிக்கு இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் கொல்லம்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

* எழும்பூர்-குருவாயூர் (16127) இடையே இன்று காலை 9 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* மங்களூரு-நாகர்கோவில் (16649) இடையே இன்று அதிகாலை 5.05 மணி, மங்களூரு-நாகர்கோவில் (16605) இடையே இன்று காலை 7.20 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக நாகர்கோவில்-மங்களூரு (16650) இடையே அதிகாலை 4.05 மணி, நாகர்கோவில்-மங்களூரு (16602) இடையே அதிகாலை 2 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story