பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2021 9:56 PM GMT (Updated: 22 Nov 2021 9:56 PM GMT)

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்.

சென்னை,

தி.மு.க. அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தியும், கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க வலியுறுத்தியும் 22-ந்தேதி(நேற்று) முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை வெவ்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி, பா.ஜ.க. இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பாக சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, பா.ஜ.க. மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டு, தமிழக அரசை கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநகராட்சி தேர்தல் பணிக்குழு தலைவரும், சென்னை பெருங்கோட்ட உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 26-ந்தேதி பா.ஜ.க. விவசாய அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாட்டு வண்டி பயண ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

Next Story