வைகை அணையில் நீர்த்திறப்பு அதிகரிப்பு - 5 மாவட்ட மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை


வைகை அணையில் நீர்த்திறப்பு அதிகரிப்பு - 5 மாவட்ட மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2021 5:28 AM GMT (Updated: 24 Nov 2021 5:28 AM GMT)

வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 5,119 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, கம்பம், போடி, போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 5,119 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story