மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விற்பனை - அமைச்சர் பெரியசாமி + "||" + Sale of vegetables including tomatoes in ration shops - Minister Periyasamy

ரேஷன் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விற்பனை - அமைச்சர் பெரியசாமி

ரேஷன் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விற்பனை -  அமைச்சர் பெரியசாமி
குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,

இது குறித்து அமைச்சர் பெரியசாமி   கூறியதாவது:

 நகர்புறம் அதனை சுற்றியுள்ள ரேஷன் கடைகளில் , தக்காளிஉள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும். இதர காய்கறிகளின் விலையும் வெளிச்சந்தையில் ஓரளவு குறைந்துள்ளது. வெளிச்சந்தையில் கிலோ ரூ.150 வரையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.90 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி ரூ.85 முதல் ரூ.100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.