மாநில செய்திகள்

ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு வரவேற்பு: ‘மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம்’ ஜெ.தீபா பேட்டி + "||" + Welcome to the judgment of the I-Court: ‘We will meet legally even if we appeal’ Interview with J.Deepa

ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு வரவேற்பு: ‘மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம்’ ஜெ.தீபா பேட்டி

ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு வரவேற்பு: ‘மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம்’ ஜெ.தீபா பேட்டி
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.
சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் 3 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.


இந்த தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

நியாயமான தீர்ப்பு

கேள்வி:- இந்த சாதகமான தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- இது சாதகமான தீர்ப்பே அல்ல. இது நியாயமான தீர்ப்பு. நியாயப்படி, சட்டப்படி, தர்மப்படி இந்த தீர்ப்பை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். சொல்லப்போனால் சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

கேள்வி:- இந்த வழக்கு நடைபெற்றபோது ஏதேனும் இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டதா?

பதில்:- இந்த வழக்கு முறைப்படி தான் நடந்தது. அதில் எந்த குறையும் சொல்லமுடியாது. சிரமங்களை அதிகம் எதிர்கொள்ளவில்லை என்றாலும் எதிர்ப்புகள் அதிகம் இருந்தது. அ.தி.மு.க. கட்சி சார்பில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.

உரிமையும், உடைமையும்...

கேள்வி:- வேதா இல்லத்தின் சாவி எப்போது உங்கள் கையில் கிடைக்க போகிறது?

பதில்:- தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம். வேதா இல்லத்தின் சாவியை பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது. நிறைய சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதை நாங்கள் செய்யவேண்டும்.

கேள்வி:- வேதா இல்லம் அ.தி.மு.க.வின் கோவில் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

பதில்:- இது சரியான கருத்து தான். அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கில்லை. நானே இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்காக சட்டப்படியான வாரிசுதாரர்களிடம் அந்த பொறுப்பு செல்வதை தடுக்க கூடாது. வேதா இல்லத்தை கோவிலாக கருதுவது அவர்களது உரிமை, அதனை உடைமை என்று எடுத்துக்கொள்வது தவறு.

சட்டரீதியாக எதிர்கொள்வோம்

கேள்வி:- இந்த தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- அப்படி ஏதாவது நடந்தால், சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம்.

கேள்வி:- வேதா இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருக்கிறதா?

பதில்:- அப்படி எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நாங்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

கேள்வி:- எப்போது வேதா நிலையம் செல்ல இருக்கிறீர்கள்?

பதில்:- நாங்கள் சட்ட விதிகளை முழுமையாக படித்து, அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க வேண்டும். அதன்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

மேற்கண்டவாறு ஜெ.தீபா பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து விவகாரம்: ‘அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும்’
ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ரத்து செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க. தலைமை உரிய நேரத்தில் முடிவு எடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2. மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும்
மருத்துவ கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டைவிட கூடுதலாக இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
3. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை அண்ணாமலை பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகம் பா.ஜ.க.வில் தொடங்கியது. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
4. ராணுவ மந்திரியாக போர் நினைவு சின்னத்தில் தொடர்ந்து மரியாதை; ராஜ்நாத் சிங் பேட்டி
காஷ்மீரின் லே நகரில் அமைந்த போர் நினைவு சின்னத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
5. விசாரணை கமிஷன் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி
எதிர்க்கட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிரட்டுகிறார் என்றும், விசாரணை கமிஷன் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.