மாநில செய்திகள்

சாலையில் வெள்ளநீர் ஓடுவதால்: பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் பகுதியில் 5-வது நாளாக போக்குவரத்துக்கு தடை + "||" + Due to flood water on the road: Traffic has been banned for the 5th day in the Perumbakkam-Cholinganallur area

சாலையில் வெள்ளநீர் ஓடுவதால்: பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் பகுதியில் 5-வது நாளாக போக்குவரத்துக்கு தடை

சாலையில் வெள்ளநீர் ஓடுவதால்: பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் பகுதியில் 5-வது நாளாக போக்குவரத்துக்கு தடை
சாலையில் வெள்ளநீர் ஓடுவதால்: பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் பகுதியில் 5-வது நாளாக போக்குவரத்துக்கு தடை.
ஆலந்தூர்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும், புறநகர் பகுதிகளில் உள்ள பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பி அதிகமாக உபரி நீர் வெளியேறுவதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்கிறது.


இதனால் பெரும்பாக்கம் எழில் நகர், ஜவகர் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்பை வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் பிரதான சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வெள்ளம் போல் நீர் ஓடுகிறது. இதன் காரணமாக பெரும்பாக்கத்தில் இருந்து சோழிங்க நல்லூர் செல்ல கூடிய பிரதான சாலையை போக்குவரத்து பயன்பாட்டிற்காக போலீசார் தற்காலிகமாக தடை விதித்தனர்.

இந்த பகுதியில் வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் சோழிங்கநல்லூர், சிறுச்சேரி, காரப்பாக்கம் பகுதிகளில் உள்ள ஐ.டி. உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்ற கூடியவர்கள் போக்குவரத்து தடையால் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

கடந்த 5 நாட்களாக இந்த பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி ஓடுவதால் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே மோட்டார் பம்புகள் மற்றும் துரித நடவடிக்கை மூலமாக தண்ணீரை வெளியேற்றி விரைவில் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை கடத்தல் வழக்கு; நடிகர் திலீப்பை வரும் 27ந்தேதி வரை கைது செய்ய தடை
நடிகை கடத்தப்பட்ட வழக்கில் வருகிற 27ந்தேதி வரை நடிகர் திலீப்பை கைது செய்ய கேரள ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.
2. பீகாரில் விஷ சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு
பீகாரில் விஷ சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. காணும் பொங்கல்; சென்னையில் கடற்கரை, பூங்காவில் கூட போலீசார் தடை
சென்னையில் முழு ஊரடங்கான இன்று, காணும் பொங்கல் கொண்டாட்டம் என்ற பெயரில், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கூட போலீசார் தடை விதித்து உள்ளனர்.
4. திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை...! மாவட்ட நிர்வாகம்
திருவண்ணாமலையில் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
5. கொரோனா பரவல் தீவிரம்: “கனடாவுக்கு பயணம் மேற்கொள்ளவேண்டாம்” - அமெரிக்கா எச்சரிக்கை..!
கொரோனா பரவல் தீவிரம் காரணமாக அமெரிக்கர்கள் கனடா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.