மாநில செய்திகள்

தந்தை மறைவு: ரூ.5 லட்சம் வாடகையில் ஹெலிகாப்டரில் வந்த அன்பு மகன் + "||" + Bangalore to Pudukottai via helicopter :Son attends dads funeral

தந்தை மறைவு: ரூ.5 லட்சம் வாடகையில் ஹெலிகாப்டரில் வந்த அன்பு மகன்

தந்தை மறைவு: ரூ.5 லட்சம் வாடகையில் ஹெலிகாப்டரில் வந்த அன்பு மகன்
சாலை மார்க்கமாக வந்தால் காலதாமதம் ஏற்படும் என்பதால் பெங்களூரிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கு வாடகை ஹெலிகாப்டர் வாங்கி,அதன் மூலம் வந்துள்ளார்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சுப்பையா (72). இவரது மகன் சசிகுமார்.திருப்பூரில் கம்பெனி வைத்து நடத்தி வரும் இவர், கம்பெனி வேலை நிமித்தமாக இந்தோனேசியா சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 30ம்தேதி தந்தை சுப்பையா உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக சசிகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, இந்தோனேசியாவில் இருந்து விமானம் மூலம் சசிகுமார் துபாய் வந்தார். பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு நேற்று வந்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடிக்கு சாலை மார்க்கமாக வந்தால் காலதாமதம் ஏற்படும் என்பதால் பெங்களூரிலிருந்து  5 லட்சம் ரூபாய்க்கு  வாடகைக்கு வாங்கிய  தனியார் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு நேற்று வந்தார்.

பின்னர் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக சொந்த ஊரான தென்னங்குடிக்கு சென்றார். அங்கு தந்தையின் இறுதி சடங்கில் சசிகுமார் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை ஹெலிகாப்டர் பெங்களூருக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் வானிலை காரணமாக, ஹெலிகாப்டர் புறப்படுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. 

இதையடுத்து, ஹெலிகாப்டர் பைலட் மற்றும் உதவியாளர் ஆகியோர் புதுக்கோட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் வானிலை சரியானதும் இன்று (2ம்தேதி) காலை ஹெலிகாப்டர் பெங்களூருக்கு புறப்பட்டு செல்லும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது ஜல்லிக்கட்டு: வன்னியன்விடுதியில் சீறி பாய்ந்த காளைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது ஜல்லிக்கட்டு போட்டி ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
2. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியது...!
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
3. பெண் அதிகாரியின் மார்பிங் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கல்லூரி மாணவர் கைது
வேளாண் பெண் அதிகாரியின் மார்பிங் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
4. புதுக்கோட்டையில் தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு!
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுவன் இன்று திடீரென உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
5. புதுக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 850 சவரன் நகை கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டம் அருகே கோபாலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜகுபர் சாதிக் என்பவர் வீட்டை உடைத்து 850 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.