ஹெலிகாப்டர் விபத்து: குன்னூர் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஹெலிகாப்டர் விபத்து: குன்னூர் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 8 Dec 2021 3:23 PM IST (Updated: 8 Dec 2021 3:23 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.

சென்னை ,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.காட்டேரி மலைப்பாதையில் ராணுவப் பயிற்சியின் போது கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது.  கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டு உள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதியாக இருக்கும் பிபின் ராவத் அவரது மனைவி  உள்பட 14 பேர் பயணித்து உள்ளனர்.ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 4 ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 உடல்கள்  80 சதவீதம்  எரிந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டன; சில உடல்கள் விபத்துநடந்த பகுதியிலுள்ள மலைச்சரிவின் கீழே விழுந்துள்ளன .

இந்த நிலையில் மீட்பு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட  முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை குன்னூர் செல்கிறார்.ஏற்கனவே விபத்து குறித்து மாவட்ட நிர்வாகம் , உயரதிகாரிகளிடம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார்.

சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு முதல் -அமைச்சர்  செல்கிறார். அதன் பிறகு சாலை மார்க்கமாக  குன்னூர் செல்கிறார்.

Next Story