பொதுமக்கள் மனசாட்சிக்கு பயந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்; அமைச்சர் வேண்டுகோள்


பொதுமக்கள் மனசாட்சிக்கு பயந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்; அமைச்சர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 Dec 2021 10:04 PM IST (Updated: 18 Dec 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் மனசாட்சிக்கு பயந்து தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் மா‌. சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.



சென்னை,

தமிழகத்தில் இன்று நடைபெற்ற 15 வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறும்போது, ஒரே நாளில் இன்று 1,97,009 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 84.26% முதல் தவணையும், 54.73% இரண்டாம் தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 8,04,61,787 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.


Next Story