அரசு, காவல் துறைக்கு அவப்பெயர்; டி.ஜி.பி. கடும் எச்சரிக்கை


அரசு, காவல் துறைக்கு அவப்பெயர்; டி.ஜி.பி. கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Dec 2021 5:50 AM IST (Updated: 28 Dec 2021 5:50 AM IST)
t-max-icont-min-icon

காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. எச்சரித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பஸ் டிரைவர் ஒருவரை மர்ம நபர் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.  இந்த வீடியோ, கடந்த 2018ம் ஆண்டில் கேரள மாநிலம் மணக்காடு பகுதியில் நடந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்டது.

ஆனால், இந்த சம்பவம் தமிழகத்தில் நடந்தது போல சித்தரித்து, அரசுக்கும், காவல் துறைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் மர்ம நபர்கள் வீடியோவை பரப்பி வருகின்றனர்.

இதுபோன்ற தவறான செய்திகள், வீடியோவை வேண்டுமென்றே பரப்பும் சமூக விரோதிகள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story