நெல்லையில் “புத்தகங்களோடு புத்தாண்டு” என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி


நெல்லையில் “புத்தகங்களோடு புத்தாண்டு” என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி
x
தினத்தந்தி 1 Jan 2022 5:24 AM GMT (Updated: 2022-01-01T10:54:15+05:30)

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இலவச புத்தகம் வழங்கி திருநெல்வேலியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.

நெல்லை,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில, ‘புத்தகங்களோடு புத்தாண்டு’ என்ற தலைப்பில் பாளையங்கோட்டை காந்தி சிலை அருகே புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கான சிறுகதைகள், வரலாற்று புத்தகங்கள், தொல்லியல் ஆய்வுகள் என 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுட்த்தப்பட்டுள்ளன. 

மேலும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 30 குழந்தைகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் இன்று அதிகாலை முதல் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். 

Next Story