தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு...! + "||" + All Semester Exams in Unversitys in Tamilnadu Postponed Due to Covid Case Raise
தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரம்பின்றி ஒத்திவைப்பு...!
தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20-ம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதிக்கு பின்னர் நடைபெற விருந்த அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிபிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், வைரஸ் பரவல் குறைந்த பின்னர் செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
எழுத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் செய்முறைத்தேர்வுகள் நடைபெறும். தேர்வுகளுக்கு தயாராவதற்காகவே மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.