'நன்றியுணர்ச்சிக்கு என்று ஒரு நாளைக் கொண்டாடுவது தமிழரின் குணநலனைக் காட்டுகிறது' - கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து


நன்றியுணர்ச்சிக்கு என்று ஒரு நாளைக் கொண்டாடுவது தமிழரின் குணநலனைக் காட்டுகிறது - கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து
x
தினத்தந்தி 13 Jan 2022 9:20 AM GMT (Updated: 2022-01-13T14:50:37+05:30)

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

சென்னை,

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். நன்றி உணர்ச்சிக்கு என்று ஒருநாளைக் கொண்டாடுவது தமிழரின் குணநலனைக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'உழவர்களுக்கு ஒரு திருநாள். நன்றியுணர்ச்சிக்கு என்றொரு நாளைக் கொண்டாடுவது தமிழரின் குணநலனைக் காட்டும். 

வேளாண்மையை, ஒன்றுகூடலை, உறவுபேணலை, புதுமை விருப்பத்தை முன்னிறுத்தும் பொங்கல் நாளில் மகிழ்ச்சியே எங்கும் நிறைய என் மனமார்ந்த வாழ்த்துகள்' என்று அவர் கூறியுள்ளார்.

Next Story