தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 11:29 PM GMT (Updated: 2022-01-14T05:16:16+05:30)

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்.

சென்னை,


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்.  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும்.  16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும்.  மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், உசிலம்பட்டி, வெள்ளகோவிலில், 3 செ.மீ., பேரையூர் மற்றும் மதுக்கூரில், 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனவர்கள் வழக்கம்போல கடலுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.


Next Story