மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல் + "||" + 1 kg gold seized at Chennai airport

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த 1 கிலோ 62 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது 2 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.


1 கிலோ தங்கம்

அதில் சிறிய அளவிலான 2 மின்சாதன கருவிகள் இருந்தது. வழக்கத்துக்கு மாறாக அவை கனமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை பிரித்து பார்த்தனர்.

அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. 2 பேரிடம் இருந்தும் ரூ.46 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 62 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோழிக்கோடு விமான நிலையத்தில் உடலில் மறைத்து எடுத்துவந்த 1 கிலோ தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது...!
கோழிக்கோடு விமான நிலையத்தில் உடலில் மறைத்து எடுத்து வந்த 1 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து ரூ.38,168 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. பளுதூக்கும் போட்டி - தங்கம் வென்ற ஏட்டுக்கு பாராட்டு...!
பெங்களூரு பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஏட்டு திருப்பதி ராஜனை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் பராட்டி கவுரவித்து உள்ளார்.
4. பிரேசில் ஒலிம்பிக் போட்டி - 2 தங்கம் வென்று மதுரை மாணவி அசத்தல்
பிரேசிலில் காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டித் தொடர் நடந்து வருகிறது
5. மதுரை விமான நிலையத்தில் ரூ.43¼ லட்சம் ் தங்கம் சிக்கியது
மதுரை விமான நிலையத்தில் ரூ.43¼ லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கியது. அதனை பச்சை நிற உருளைகளாக மாற்றி கடத்தி வந்த நெல்லை பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.