மாநில செய்திகள்

தமிழகத்தில் 19-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது + "||" + The 19th Special Corona Vaccination Camp has started in Tamil Nadu

தமிழகத்தில் 19-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழகத்தில் 19-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
தமிழகத்தில் 19-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும்விதமாக சிறப்பு முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தியது. இந்த தடுப்பூசி முகாம், பலர் தடுப்பூசி போட உதவியாக இருந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அந்த வகையில் கடந்த 8-ந் தேதி 18-வது சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கடந்த வாரம் 15-ந் தேதி (சனிக்கிழமை) பொங்கல் விடுமுறை என்பதால் இந்த சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 19-வது கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை மையம்
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2. நீலகிரி, கோவைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை எச்சரிக்கை
நீலகிரி, கோவைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
3. தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.