பொங்கல் பண்டிகை: போக்குவரத்துக்கழகத்திற்கு ரூ.138 கோடி வருவாய்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Jan 2022 7:46 AM GMT (Updated: 22 Jan 2022 7:46 AM GMT)

பொங்கலையொட்டி அரசு பேருந்துகள் மூலம் ரூ.138.07 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்படி கடந்த 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் பண்டிகைக்கு முன்பும், 15,16,17,18,19-ந்தேதியில் பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்புவதற்கும் 16,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் வெளியூர்களுக்கு அதிகளவு பயணம் செய்தனர். 

இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னிட்டு ஏறத்தாழ 7 கோடி பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் பயணம் செய்துள்ளனர் என்றும். இதன்காரணமாக, தமிழக போக்குவரத்துத் துறைக்கு சுமார் 138.07 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 11,12,13 ஆகிய நாட்களில் மொத்தம் ரூ.65.58 கோடியும், ஜனவரி 15,16,17,18,19 ஆகிய நாட்களில் மொத்தம் ரூ.72.49 கோடியும் என மொத்தமாக சுமார் 138.07 கோடி ரூபாய் போக்குவரத்துத் துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். 

Next Story