வேட்புமனுவில் தவறான தகவல்: ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் மீதான வழக்குக்கு தடை


வேட்புமனுவில் தவறான தகவல்: ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் மீதான வழக்குக்கு தடை
x
தினத்தந்தி 28 Jan 2022 7:10 PM GMT (Updated: 28 Jan 2022 7:10 PM GMT)

வேட்புமனுவில் தவறான தகவல்: ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் மீதான வழக்குக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத்தும் தங்களது வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்துள்ளனர், தவறான தகவல்களை அளித்துள்ளனர் என்று தேனி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, வருகிற பிப்ரவரி 7-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வமும், ரவீந்திரநாத்தும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் எமலியாஸ் ஆஜராகி வாதிட்டார். போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் ஆகியோர் மீது பதிவான வழக்குக்கு தடை விதித்த நீதிபதி, விசாரணையை வருகிற பிப்ரவரி 1-ந் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Next Story