நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 29 Jan 2022 7:46 AM GMT (Updated: 29 Jan 2022 7:46 AM GMT)

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்- ஈபிஎஸ் உடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தினார்.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது. 

அதிமுகவை பொறுத்தவரை இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அவர்களுக்கு மிகமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகவே கருதப் படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி விட வேண்டும் என முயற்சியில் அதிமுகவினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.  

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.  ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
பேச்சுவார்த்தைக்காக அதிமுக அலுவலகத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் வருகை தந்தனர். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்- ஈபிஎஸ் உடன்  பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். 


Next Story