16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த மகன் - உடந்தையாக இருந்த தந்தை : வெளியான அதிர்ச்சி தகவல்
16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வழக்கில் இளைஞர் மற்றும் அவரது தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் வெள்ளோடு அருகே 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்த தனது 16 வயது மகளைக் காணவில்லை என்று சிறுமியின் தாய் போலீசில் கடந்த 7ம் தேதி புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் முருகேசன், காணாமல் போன 16 வயது சிறுமியுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கட்டிட தொழிலாளியான முருகேசன் சிறுமியைக் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகவும், கடந்த 6ம் தேதி தனது தந்தையின் அறிவுரைப்படி சிறுமியை அழைத்துக் கொண்டு கிட்டாம்பட்டி என்ற ஊரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முருகேசன் மற்றும் அவரது தந்தை ரத்தினம் ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முருகேசனின் அண்ணன் பூபதி தலைமறைவான நிலையில், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story