தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு; விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள்!


தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு; விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள்!
x
தினத்தந்தி 21 Feb 2022 8:17 AM GMT (Updated: 21 Feb 2022 8:18 AM GMT)

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழு இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் ,

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்த அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா (வயது 17), கடந்த சில நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதால் தான் மன உளைச்சல் ஏற்பட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. 

இதுதொடா்பான மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதிப்படுத்தியது. 

இதனையடுத்து, மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த நிலையில், இன்று
மாணவி லாவண்யா படித்த பள்ளியில், ஐஜி வித்தியா குல்கர்னி தலைமையில் 10 பேர் கொண்ட குழு  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பள்ளியின் விடுதி காப்பாளர் மற்றும் மாணவ மாணவியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நிறைவடைய சில மணி நேரம் ஆகும் என்பதால் அதன் பின்னரே இன்றைய விசார்ணை குறித்த முழு தகவலும் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story