எரிபொருள் விலை உயர்வு சர்வதேச பிரச்சனையாக உள்ளது - ஜி.கே.வாசன்


எரிபொருள் விலை உயர்வு சர்வதேச பிரச்சனையாக உள்ளது - ஜி.கே.வாசன்
x
தினத்தந்தி 10 April 2022 3:19 PM IST (Updated: 10 April 2022 3:19 PM IST)
t-max-icont-min-icon

எரிபொருள் விலை உயர்வு சர்வதேச பிரச்சனையாக உள்ளது என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

திருவள்ளூர்,

பிற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுக்குள் இருப்பதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எரிபொருள் விலை உயர்வு சர்வதேச பிரச்சினை என்று கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

"பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக மக்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதிலே யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த பிரச்சினை இன்றைக்கு இந்திய அளவிலே மட்டுமில்லாமல் சர்வதேச பிரச்சினையாக இருக்கிறது. 

ஈரான், உக்ரைன் போரின் அடிப்படையிலே இந்த பிரச்சினை தொடங்கி பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென்று உயர்ந்து கொண்டிருக்கிறது. பல நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது பெட்ரோல், டீசல் விலை இந்தியாவிலே ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கின்றது" என்று அவர் கூறினார்.

Next Story