பள்ளிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கல்வித்துறை அறிவிப்பு


பள்ளிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கல்வித்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 11 April 2022 11:12 PM GMT (Updated: 2022-04-12T04:42:17+05:30)

பள்ளிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

சென்னை,

தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறை நாளாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் கிறிஸ்தவர்களால் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி அனுசரிக்கப்பட இருக்கிறது.

இந்த 2 நாட்கள் விடுமுறை அடுத்தடுத்த நாட்களில் (வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை) வருகிறது. அடுத்து சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாக இருந்தது. இந்த நிலையில் அந்த நாளையும் விடுமுறை நாளாக அறிவித்து கல்வித்துறை நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொடர்ந்து 4 நாட்கள்...

2021-22-ம் கல்வி ஆண்டில் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் 15-ந் தேதி புனித வெள்ளி ஆகிய 2 நாட்களும் தொடர் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. விடுமுறை முடிவுற்று வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறையின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வருகிற 14-ந் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story