இடி தாக்கி 25 ஆடுகள் பலி! விவசாயி உயிர் தப்பினார்!
தர்மபுரி அருகே மலைப்பகுதியில் நிறுத்தி சென்ற 25 ஆடுகள் இடி தாக்கியதில் உயிரிழந்தன.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரியூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த கெட்டையன் (எ) பெருமாள் என்பவரது மகன் சக்திவேல் (வயது 28). விவசாயி. இவருக்குச் சொந்தமாக நிலம் ஏதும் இல்லாத நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது இவரது ஆடுகளை மலைப்பகுதியில் பாறை இடுக்குகளில் நிற்க வைத்து விட்டு இவர் வீட்டுக்கு வந்து விட்டார்.
பின்னர் இன்று காலை சக்திவேல் ஆடுகள் நிற்கும் இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு நிறுத்தி சென்ற 25 ஆடுகளும் முன்தினம் இடி தாக்கியதில் இறந்து கிடந்தது.
இதனைக்கண்டு சக்திவேல் அதிர்ச்சி அடைந்தார். ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தனது 25 ஆடுகள் இடி தாக்கி இறந்தது குறித்து அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Related Tags :
Next Story