சசிகலாவின் பினாமி என்று கூறி சொத்துகள் முடக்கத்தை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு


சசிகலாவின் பினாமி என்று கூறி சொத்துகள் முடக்கத்தை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 20 April 2022 6:59 PM GMT (Updated: 20 April 2022 6:59 PM GMT)

சசிகலாவின் பினாமி என்று கூறி சொத்துகள் முடக்கத்தை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வீட்டில் 2017-ம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, பண மதிப்பு இழப்பு செய்யப்பட்ட காலத்தில், ரூ.1,600 கோடிக்கு பினாமிகளின் பெயரில் பல்வேறு சொத்துகளை வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின.

இதன் அடிப்படையில் சசிகலாவின் பினாமிகள் என்று பலரது சொத்துகள் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து நவீன் பாலாஜி உள்பட 14 பேர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், சத்தியநாராயண பிராசாத் ஆகியோர், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நேற்று உத்தரவிட்டனர்.

Next Story