அரசியல் கட்சி தலைவர்கள் ரமலான் வாழ்த்து
ரமலான் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:- அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம் என்று கூறி, இந்த இனிய திருநாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறோம்.
கே.எஸ்.அழகிரி, டாக்டர் ராமதாஸ்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- இந்த இனிய ஈகை திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு 'சதக்கத்துல் பித்ர்' என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- மனிதர்கள் அறநெறிகளை கடைபிடித்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ரமலான் கற்றுத்தரும் பாடங்களை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தவரும் கடைபிடிக்க வேண்டும். அதை கடைபிடித்தால் உலகம் முழுவதும் மனிதம் தழைக்கும் என்பது உறுதி.
அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை:- எல்லா புகழும் இறைவனுக்கே என்று வாழ்ந்து, படைத்த இறைவன் சிந்தனையில், பகல்பொழுது எல்லாம் உடல் வருத்தி உண்ணா நோன்பிருந்து, எளியோருக்கும், வறியோருக்கும் இரக்கம் காட்டும் இனிய திருநாள், ரமலான் பண்டிகை.
இந்த புனித நோன்பிருந்து ரமலான் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும், நல்ல உடல் நலத்தோடும், மனநிறைவோடும், அமைதியோடும், சமாதானத்தோடும், சகோதர வாஞ்சையோடும், மகிழ்ச்சியாக வாழ மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
வைகோ-தொல்.திருமாவளவன்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- "ரமலான் பண்டிகை கொண்டாடும் இந்த இனிய நன்னாளில் சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதிகொண்டு, இஸ்லாமிய பெருமக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- "30 பிறை கண்டு ரமலான் நோன்பை நிறைவு செய்யும் இஸ்லாமிய பெருங்குடி மக்கள் யாவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்வியல் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் ரமலான் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜயகாந்த்,அன்புமணி ராமதாஸ்
இதேபோல தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி., தலைவர் ரவி பச்சமுத்து, சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்,
இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் எம்.முகமது சேக் அன்சாரி, அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் ஆ.மணி அரசன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் யாதவ், லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் நெல்லை ஜீவா,
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன், ஜமியத் உலமா ஹிந்த் அமைப்பின் மாநில செயலாளர் நிஜாமுதீன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் கோல்டன் அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப், முஸ்லிம் மக்கள் கழக தலைவர் ஏ.கே.தாஜூதீன், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், தமிழ்நாடு ஜனநாயக ஜனதாதள மாநில தலைவர் டி.ராஜகோபால் ஆகியோரும் ரமலான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story