மாணவர்கள் தயக்கம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை


மாணவர்கள் தயக்கம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை
x

மாணவர்கள் தயக்கம் இல்லாமல் வருகை தந்து தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3,936 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 9.55 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

இந்த நிலையில், மாணவர்கள் தயக்கம் இல்லாமல் வருகை தந்து தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-

மாணவர்கள் தயக்கம் இல்லாமல் வருகை தந்து தேர்வு எழுத வேண்டும். தேர்வு குறித்த பயம் இல்லாமல் மாணவர்கள் மகிழ்ச்சியாக தேர்வினை எழுதி செல்ல வேண்டும்.  அனைத்து மாவட்ட முதன்மை பள்ளிக்கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து தேர்வெழுதாத மாணவர்களை இனி வரும் நாட்களில் தேர்வு எழுத வைக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் கைகளில் சாதி கயிறு கட்டும் பழக்கம் உள்ளது. பள்ளிகளில் இந்த மாதிரியான சாதி கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவது கண்டிக்கத்தக்கது, மட்டுமல்லாது வேதனைக்குரியது என்று கூறினார்.

Next Story