விழுப்புரம்: பைக்கில் வந்து பொறுப்பாக உளுந்து திருடிய இளைஞர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி..!
விழுப்புரம் அருகே வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து மூட்டை திருடிய வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது அங்கிருந்து சந்தேகப்படும்படியாக இளைஞர்கள் 2 பேர் பைக்கில் ஒரு மூட்டையை கொண்டு சென்றுள்ளனர்.
இதை கண்ட வியாபாரிகள், பொதுமக்கள் சிலரின் உதவியோடு அவர்களை மடக்கி பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் மற்றொருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து உளுந்து மூட்டை ஒன்றை திருடி சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் அவர்கள் திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story