குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - டி.என்.பி.எஸ்.சி...!
தமிழகத்தில் குரூப் 2 போட்டித் தேர்வு வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது
சென்னை,
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது.
திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர்.
அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு உள்ளது.
இதில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வரும் மே 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற வலை தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story