சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் - அமைச்சர் மெய்யநாதன் தகவல்


சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் - அமைச்சர் மெய்யநாதன் தகவல்
x
தினத்தந்தி 14 May 2022 8:50 PM GMT (Updated: 2022-05-15T02:20:41+05:30)

சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் நடைபெற இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story