நெல்லை: தொடர்ந்து பாறைகள் சரிவதால், கல்குவாரியில் மீட்பு பணிகள் தற்காலிக நிறுத்தம்!


நெல்லை: தொடர்ந்து பாறைகள் சரிவதால், கல்குவாரியில் மீட்பு பணிகள் தற்காலிக நிறுத்தம்!
x
தினத்தந்தி 15 May 2022 5:47 AM GMT (Updated: 2022-05-15T11:17:57+05:30)

நெல்லை கல்குவாரி மீட்பு பணியின்போது மீண்டும் ஒரு ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் 300 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக ராட்சச பாறை சரிந்த விழுந்ததில், தொழிலாளர்கள் 6 பேர் 300 அடி பள்ளத்தில் சிக்கி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீ ட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 300 அடி பள்ளத்தில் 3 ஜேசிபி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகள் சிக்கியுள்ளது.

ராட்சச பாறை விழுந்த இடத்தில் ஆறு தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த தொழிலாளி கூறிய தகவலின் மூலம் 3 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், 3000 அடி பள்ளத்தில் இறங்கி மீட்புப்பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டிருந்தபோது, சம்பவ இடத்திற்கு அருகே மிகப்பெரிய பாறை ஒன்று சரிந்து விழுந்தது. மேலும், சிறிய அளவிலான பாறைகளும் கற்களும் விழுந்துகொண்டிருப்பதால், மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தீயணைப்புப்படையினர் மீட்புப்பணியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மீட்புப்பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story