குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 215 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 215 பேர் கைது
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் கடந்த 25-ந் தேதி முதல் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய 4 உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 79 சட்டம்- ஒழுங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 106 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 109 சாராய வழக்குகளில் தொடர்புடைய 108 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 137 லிட்டர் சாராயம், 500 லிட்டர் புதுச்சேரி சாராயம், 1,451 மதுபாட்டில்கள், 28 லிட்டர் கள் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் மீது தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 1¾ கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.