காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 23 பேர் காயம்


காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 23 பேர் காயம்
x

ஜோலார்பேட்டை அருகே காளை விடும் விழாவில் மாடுகள் முட்டி 23 பேர் காயம்

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சியில் காளை விடும் விழா நேற்று நடைபெற்றது.

ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சதீஷ் குமார் தலைமை தாங்கினார்.

ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி, முன்னாளளள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காளை விடும் விழாவை தொடங்கி வைத்தனர்.

இதில் கிருஷ்ணகிரி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 350 காளைகள் பங்கேற்றன.

சீறிப்பாய்ந்த காளைகளை தடுக்க முயன்றபோது மாடுகள் முட்டியதில் 23 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சோமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மின்னல் ராணி காளைக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், விருதம்பட்டு பகுதியை சார்ந்த பல்சர் ராணி காளைக்கு 2-வது பரிசாக ரூ.70 ஆயிரமும், கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த காளைக்கு 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.

வருவாய்த்துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், கால்நடை துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story