லோடு ஆட்டோவில் கடத்திய 240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


லோடு ஆட்டோவில் கடத்திய 240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

லோடு ஆட்டோவில் கடத்திய 240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லையில் இருந்து லோடு ஆட்டோவில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகர் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அதில் நெல்லையில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு பன்னம்பாறையை சேர்ந்த கந்தசாமி மகன் பொன்முத்து (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லோடு ஆட்டோவில் இருந்த 240 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 770 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். லோடு ஆட்டோ உரிமையாளர் திருப்பூரில் கடை நடத்தி வரும் சுப்பையா என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story