போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 25 மாடுகள் பிடிபட்டன


போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 25 மாடுகள் பிடிபட்டன
x

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 25 மாடுகள் பிடிபட்டன

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 25 மாடுகளை நகராட்சி அலுவலர்கள் பிடித்து உரிமையாளர்களுக்கு தலா

ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

25 மாடுகள் பிடிபட்டன

பட்டுக்கோட்டை நகரில் இரவு, பகல் எந்நேரமும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படும் நிலை இருப்பதாலும் மாடுகளை பிடித்து பவுண்டில் (பட்டி) அடைக்க வேண்டும் என்று நகர்மன்ற கூட்டங்களில் உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் உத்தரவின் பேரில் துப்புரவு அலுவலர் நெடுமாறன், துப்புரவு ஆய்வாளர்கள் அறிவழகன், ஆரோக்கியசாமி ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி பணியாளர்கள் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 25 மாடுகளை பிடித்து நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக அடைத்து வைத்திருந்தனர்.

ரூ.75 ஆயிரம் அபராதம்

இதுகுறித்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிடிப்பட்ட 25 மாடுகளுக்கும் தலா ரூ. 3ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 75ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் சாலைகளில் மாடுகளை சுற்றித்திரிய விடுவது தெரியவந்தால் பிடித்து கும்பகோணம் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story