ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் காத்திருக்க ரூ.25.5 லட்சத்தில் கூடாரம் அமைப்பு


ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் காத்திருக்க ரூ.25.5 லட்சத்தில் கூடாரம் அமைப்பு
x

திருப்பதி போல் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்க ரூ.25.5 லட்சத்தில் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருப்பதி போல் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்க ரூ.25.5 லட்சத்தில் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட கூடாரம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கட்டணமில்லா வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பிரகாரத்தில் இருந்து கொடிமரம் வரை செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் பக்தர்களை வெயில், மழை, பனியில் இருந்து காக்கும் வகையில் பிரமாண்ட கூடாரம் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூடாரத்தில் சுமார் 800 பக்தர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதியும், மின் விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது, இங்கு பப்சீட்டால் மேற்கூரையும், இரும்பு தடுப்புகளால் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.25.5 லட்சம் ஆகும்.

கட்டணமில்லா...

மேலும் கட்டணமில்லா மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் அமர்ந்து கொள்ள ரூ.42 லட்சம் மதிப்புள்ள 350 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளது.


Next Story