விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு


விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு
x

விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு 6-ந் தேதி தொடங்குகிறது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே வைப்பாறு வடகரையில் விஜயகரிசல்குளம் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் அகழாய்வு கடந்த ஆண்டு மார்ச் 16-ந் தேதி முதல் செப்டம்பர் இறுதி வரை நடைபெற்றது. வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் முன்னதாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்களை வெளிப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு முதலாம் கட்ட அகழாய்வு நடத்தது. இதில் 3,254 பழங்கால பொருட்கள் கிடைத்தன. இங்குள்ள மக்கள் வெளி நாடுகளில் கடல்வழி வாணிபம் செய்ததற்காண சான்றாக பல்வேறு பழமையான பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியை 2-ம் கட்ட அகழாய்வில் அறிய முடியும் என்பதால் 2-ம் கட்ட அகழாய்வு தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் வருகிற 6-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்க உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இந்த பணிகளை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைக்க உள்ளார்.


Next Story