மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்
x

மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை

ஆரணி

மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலருடன் ரோந்து பணி மேற்கொண்டிருந்தார்.

அப்போது எதிரே 3 மாட்டு வண்டிகள் வந்தன. அதனை நிறுத்தும்படி கூறியபோது 3 மாட்டுவண்டிகளையும் நடுரோட்டில் நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். 3 மாட்டு வண்டிகளிலும் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரவணன், பரசுராமன் ஆகிேயாருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. 3 மாட்டு வண்டிகளையும் அவர்கள் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஆரணி தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story