சூதாடிய 3 பேர் கைது


சூதாடிய 3 பேர் கைது
x

சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

வையம்பட்டி:

வையம்பட்டியை அடுத்த சீகம்பட்டி காட்டில் சிலர் சூதாடுவதாக வையம்பட்டி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ரூபன்ராஜிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று, அங்கு சூதாடியவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் எஸ்.புதுப்பட்டியை சேர்ந்த மனோகரன்(வயது 40), சுரேஷ்(35), சீகம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன்(36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் ரூ.500 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story