மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்பாதநல்லூரில் மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

சீர்பாதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள்(வயது 62). இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் முனியம்மாளிடம் பேச்சு கொடுத்து அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவுசெய்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story