பருப்பு வகைகளின் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு


பருப்பு வகைகளின் ஏற்றுமதி 3 மடங்கு உயர்வு
x

கடந்த 5 ஆண்டுகளில் பருப்பு வகைகளின் ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

விருதுநகர்

விருதுநகர்,

கடந்த 5 ஆண்டுகளில் பருப்பு வகைகளின் ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

பருப்பு இறக்குமதி

இதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது:-

உலகம் முழுவதும் சைவ உணவு வகைகளின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பருப்பு வகைகளின் தேவை அதிகரித்து வருகிறது. அதிலும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சாகுபடி பாதிப்பு காரணமாக அங்கு பருப்பு வகைகளின் தேவைக்கு இறக்குமதி செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர சீனா, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பருப்பு வகைகளின் இறக்குமதி அதிகரித்துள்ளது.

இந்த நாடுகளின் பருப்பு தேவைக்கு இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 22 முதல் ஜனவரி 23 வரை 278.1 லட்சம் டன் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சிறுதானிய ஏற்றுமதி

கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் 273.22 லட்சம்டன் பருப்பு வகைகள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. பொதுவாக கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகள் தான் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 5.39 லட்சம் டன் பருப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 2021-22-ல் 4.1 லட்சம் டன்னும், 2020-21-ல் 2.95 லட்சம் டன்னும், 2019-20-ல் 2.35 லட்சம் டன்னும், 2018-19-ல் 2.89 லட்சம் டன்னும், 2017-2018-ல் 1.8 லட்சம் டன்னும் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் பருப்பு ஏற்றுமதி 3 மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் தற்போது நடப்பாண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பருப்பு மற்றும் சிறுதானிய ஏற்றுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஏற்றுமதி வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.


Next Story